• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்ந்தது

ByA.Tamilselvan

Jul 21, 2022

பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனை தொடர்ந்து பால்பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆவின் நெய்யும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்ட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது. இந்த நிலையில் ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு இன்று முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.