தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, காட்ரோடு அருகில் அருள்வாக்கு வழங்கும் ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்புச்சாமி கோவிலில், 12ம் ஆண்டு ஆடி அமாவாசை மாபெரும் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஸ்ரீ கருப்புச்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் அருள்வாக்கு சித்தர் பாண்டி பூசாரி ஆசி பெற்ற இளம் சித்தர் தங்கம் பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு தந்தார். பெரியகுளம், தேவதானப்பட்டி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள், பக்தர்கள் கருப்புச்சாமி வணங்கி, தங்கம் பூசாரியிடம் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி காவல்துறையினர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.