• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை, மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்..!

ByKalamegam Viswanathan

Jan 10, 2024

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, தன்னிடம் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தினை பெண் ஒருவர் தானமாக வழங்கியுள்ளார்.
மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்துவதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம் தனக்கு சொந்தமான நிலத்தை 1ஏக்கர் 52 சென்ட் இடம், சுமார் ரூ4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை தனது மகள் “ஜனனி” நினைவாக அரசுக்கு தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளதனை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், மற்றும் தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் உடனிருந்தனர்.