• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ByA.Tamilselvan

Nov 22, 2022

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
சென்னைக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம்-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்பதால் மத்திய மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையும், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்,மேலும் வட தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.