• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வரும் வீடியோ வெளியாகி பரபரப்பு…

BySeenu

May 26, 2025

ஐயோ, உள்ள போ, உள்ள போ.., யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வருவதனை பார்த்து கதறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி. பழங்குடி மூதாட்டி குஞ்சம்மாள் வீட்டிற்கு அந்த ஒற்றை கொம்பு (தந்தம்) யானை, அவர் வீட்டின் கூரையை பிரித்து பந்தாடியது. அதனைப் பார்த்த அங்குள்ள ஒருவர் தனது அலைபேசியில் படம் பிடித்துள்ளார். பதவகைக்கும் விதமாக இருந்த அந்த யானையின் ஆக்ரோஷமான நகர்வை பார்த்த அப்பகுதியினர் மிரண்டு போய் இருக்கின்றனர். ஐயோ … உள்ளே போ … உள்ளே போ … என கத்தி கூச்சலிடுகின்றனர். யானை ஆக்ரோஷமான இந்த நகர்வின்பொழுது அங்கு இருந்த ஒரு ஆடு பரபரப்பாக ஓடியது. மூதாட்டி வீட்டருகே யானை வந்த பொழுது யாரும் அப்பகுதியில் இல்லாததால் வேறு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. வீட்டின் கூரை சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ரோந்து பணியில் இருந்த வனத்துறை யானையை விரட்டி வனத்திற்குள் விட்டனர். வறட்சி காலங்களில் யானை ஊருக்குள் உலா வரும் நிலையில், தற்போது மழைக் காலங்களில் யானை ஊருக்குள் உலா வருவது பொது மக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யானை ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள் வனத்துறைக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.