• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருப்புக்கோட்டை அருகே, டீசல் இல்லாமல் சாலை நடுவே நின்ற அரசு பேருந்து மீது, வேன் மோதி விபத்து…வேன் கிளீனர் உட்பட 2 பேர் பலி…..

ByKalamegam Viswanathan

Aug 28, 2023

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக, தூத்துக்குடிக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஓட்டி வந்தார். பேருந்தில் 54 பயணிகள் இருந்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி புறவழிச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பேருந்தில் டீசல் இல்லாமல் சாலையின் நடுவே அப்படியே நின்று விட்டது. அப்போது அதே சாலையில், கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின் பகுதியின் மீது பயங்கரமாக மோதியது. வேன் மோதியதில், அரசுப் பேருந்து தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய சரக்கு வேன் கிளீனர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜ்ரூல்இஸ்லாம் (23) மற்றும் பேருந்தில் பயணம் செய்த கமுதி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (49) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த ராஜா, பழனிவேல், அந்தோணி, ரோகினி, கணேசன் உட்பட15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.