ஆவணி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலுக்கு மாந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
இந்த நிலையில், ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 4நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று (28ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைமீது சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, 10 வயதுக்கு குறைவானவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.