விவசாயிகளுக்கு எதிராக நாகப்பட்டினத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகை தரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை திரும்பி செல்ல வலியுறுத்தி விவசாயிகள் வெட்டாற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த தடுப்பணையை பூதங்குடியில் வெட்டாற்றில் கட்ட வேண்டும் என சில விவசாய சங்கங்கள் போராடி வருகின்றது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த கோரி நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இதை அறிந்த உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்ய வரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகப்பட்டினம் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி உத்தமசோழபுரத்தில் அணை கட்டும் இடத்தில் வெட்டாற்றில் கருப்பு கொடியுடன் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.