• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதுமலை புலிகள் காப்பகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலாளியை தாக்கிய புலி…

படுங்காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானை புலி சிறுத்தை கரடி மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதுமலை வனசரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் வயதுடைய பொம்மன் (30). இவர் இன்று தனது பணியை முடித்துவிட்டு தெப்பக்காடு பகுதியில் உள்ள தனது குடியிருப்பு அருகே சென்று கொண்டிருக்கும் போது,தண்ணீர் தொட்டி அருகே பதுகியிருந்த புலி ஒன்று அவரை தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த பொம்மன் குக் குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுள்ளனர். என்னப்பா இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காயமடைந்த பொம்மனை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.