• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நவீன அறிவியல் துறை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை துவங்கியது

BySeenu

Mar 27, 2024

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன வளரந்து வரும் அறிவியல் துறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா தேவி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக,பேராசிரியர் மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நவீன தொழில் நுட்பத்தில் அறிவியல் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த அவர்,நவீன அறிவியலை பாடபுத்தகம் மட்டுமின்றி கற்றல் திறனோடு மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனா நன்றியுரை வழங்கினார்.
மூன்று நாட்கள் பல்வேறு அமர்வுகளாக நடைபெற உள்ள இதில்,பெங்களூர் பல்கலைகழக இயற்பியல் துறை பேராசிரியர் உஷா தேவி, சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்..இந்த பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த்மாணவ, மாணவிகள், பேராசியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.