• Sat. Mar 22nd, 2025

பயம் எங்க பயோடேட்டா – லேயே கிடையாதாம்… திருப்பரங்குன்றத்தில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

ByKalamegam Viswanathan

Jun 16, 2023

மதுரையில், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிக்கும் வகையில், ‘நாங்க மிசாவையே பார்த்தவங்க, பயம் எங்க பயோடேட்விலேயே கிடையாது’ என தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன் தினம் அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை குறித்து பல கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த திமுகவினர் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மத்திய அரசை சுட்டிக்காட்டி ‘ஒன்றிய அரசே உங்கள் மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது. நாங்க மிசாவையே பார்த்தவங்க பயம் எங்க பயோடேட்டாலயே கிடையாது’ என போஸ்டர் ஒட்டி உள்ளது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.