மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமுருகன் பஞ்சு குடோன் உள்ளது. இன்று மாலை அங்கு வேலை ஆட்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது பஞ்சு இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீ பற்றியது உடனே குடோனில் அருகருகே வைக்கப்பட்டிருந்த பஞ்சுகளில் வேகமாக தீ பற்றியது மளமளவென எறிய தொடங்கியதால் தீயில் இருந்து வெளிவந்த கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் நிறைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். பின்னர் தீய அணைக்க முடியாதால் மதுரையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் இரண்டு வரவழைக்கப்பட்டு போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.