• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து..!

Byவிஷா

Jan 6, 2024

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர்.
அது மட்டுமின்றி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு பயணிகளை மீட்டனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.