புதுச்சேரி உருளையின் பேட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட அம்மனை வீதி உலாவாக அழைத்து வந்தால் நாட்டு மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று செழிப்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

அந்த வகையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய கத்திப்போடும் வினோத இன்று திருவிழாவானது இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேவாங்கூர் சமூகத்தினரால் நடத்தப்படும் வினோத கத்தி போடும் திருவிழாவில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கத்திப்போட்டு ரத்தம் சொட்ட சொட்ட அம்மனை வீதி உலாவாக அழைத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.