• Fri. Apr 26th, 2024

எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலையா? கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

Byதரணி

Mar 14, 2023

எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக 78 கோடிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாரியம்மன் கோவில் திடல் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது/ ராஜபாளையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் அதிமுக ஆட்சியில் தான் பல சாதனை திட்டங்கள் கொண்டு வரபட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருபாலர் பயிலும் அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டது. சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கல்லூரி மற்றும் விருதுநகரில் மெடிக்கல் கல்லூரி என்ன அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். இன்று நடக்கும் திமுக ஆட்சி விடியாமல் இருக்கிறது. மக்களுக்கு நன்மையே செய்யாது. கன்னியாகுமரி சாலை தேசிய நெடுஞ்சாலை விருதுநகர் மெடிக்கல் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. பல்லாண்டு காலம் விருதுநகர் மாவட்ட மக்களின் கனவு அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். .
திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு . 4 ஆயிரமும், தொழிற்சாலையருக்கு . 40 ஆயிரமும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 23 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கக்கூடிய அத்தனை திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக கொடுத்துக் கொண்டிருந்த அனைத்தும் நிறுத்திவிட்டனர்.
திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை மந்திரியாக ஆகியது தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வோம் என மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற திமுக அதனை செய்யவில்லை. ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிக்கு அறிவித்த திமுக இன்றுவரை வழங்கவில்லை.. கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை. எதுவுமே இதுவரை சொன்னதை திமுக அரசு கொடுக்கவில்லை. எதுவுமே கொடுக்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டு அந்த பல நல்ல திட்டங்களை நிறுத்தி விட்டனர். நாங்கள் பத்தாண்டுகளாக ஏதாவது ஒன்றை புதிதாக கொடுத்துக் கொண்டிரிந்தோம். அம்மா உணவகம், முதியோர் உதவி தொகை, தாலிக்கு தங்கம் திட்டம், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் லேப்டாப், திருமண உதவி திட்டம் , அம்மா மினி கிளினிக் என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டனர்.
திமுக ஆட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு பென்சில் பேனாவாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் கலைஞருக்கு எழுதாத பேனாவுக்கு 80 கோடி செலவு செய்கின்றனர் 2 கோடி ரூபாய் செலவில் பேனாவுக்கு செலவு செய்து விட்டு 78 கோடியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் 1300 பெண்களுக்கு சேலை மற்றும் ஆண்களுக்கான வேஷ்டி மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி ஆகிய நலத்திட்டங்களை முன்னாள் அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜி வழங்கினார்.இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *