தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கடந்த 20.12.2024 அன்று பத்திரிகை வாயிலாக அறிவித்தது.
மேலும், சம்மேளன உறுப்பினர்களை வைத்து வேலை செய்யும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்
அதன் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் சம்மேளனதில் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களுக்கு கடந்த 27.1.25 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளர்கள். அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்ததை சுட்டிக்காட்டி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.
அவ்வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தாங்கள் விரும்பும் தொழிலாளர்களை வைத்து தங்களின் திரைப்பட படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து கொள்கிறது.
தயாரிப்பாளர்கள் பயன் பெறும் வகையில் “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கும் கட்டத்திற்கு நமது சங்கம் வந்துள்ளது. தயாரிப்பார்கள் தாங்கள் திரைப்படங்களுக்கு விரும்பும் தொழிலாளர்களை வைத்து தயாரித்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இது சம்பந்தமாக நாளிதழ்களில் விளம்பரம் வரவுள்ளது. அதேசமயம் மேற்படி அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் விளம்பரத்தினை பார்த்து அதில் உள்ள முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.