மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நல்.கர்ணன், மாவட்டத் துணை செயலாளர் தங்கராசு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
இதில், பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணன், அழகர், ஜெயச்சந்திரன், சோமநாதன், கோபால், அரிமலை, நாகராஜ், பெருமாள், கருப்பையா, நிதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செப்டம்பர் 14 கட்சி துவக்க நாள் விழா, பத்ம பூஷன் விருது, கட்சியின் 20ஆம் ஆண்டு விழா, 72 வது கேப்டன் பிறந்தநாள் விழா ஆகியவற்றின் பொதுக் கூட்டத்திற்கு, வரும் 5ந்தேதி வாடிப்பட்டிக்கு வருகை தரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், சங்கு நன்றி கூறினார்.
வாடிப்பட்டிக்கு வருகை தரும் பிரேமலதாவுக்கு சிறப்பான வரவேற்பு.., கிருஷ்ணா மஹாலில் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்…
