மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ஆனையூர் நகர்ப்புற முதியோர் இல்லத்தில் குளிர்கால போர்வைகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
மதுரையில் பல்வேறு பொதுநல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்நிலையில் ஆனையூர் நகர்ப்புற காப்பகத்தில் முதியோர்கள் குளிரால் சிரமப்படும் தகவல் அறிந்தேன். உடனடியாக எனது சொந்த செலவில் குளிர்கால போர்வைகள் வாங்கி முதியோர்களுக்கு நேரில் வழங்கிய போது அவர்களின் மகிழ்ச்சியை கண்டதில் மன நிறைவாக உணர்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், முதியோர் இல்ல பொறுப்பாளர் சுசீலா கலந்துகொண்டனர்.