• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த பாம்பு!!

ByK Kaliraj

Mar 26, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி அருகே பாலம்மாள் காலனி உள்ளது. இங்கு நடராஜன் என்பவர் வீட்டில் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த ஐந்து அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.