• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிட தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும்-மூத்த வழக்கறிஞர் ரஜினி மதுரையில் பேட்டி

Byகுமார்

Jun 16, 2024

அடுத்து வர உள்ள தேர்தலுக்குள்ளாக மீனவ சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு என தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும் என நீல புரட்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரஜினி மதுரையில் பேட்டி அளித்தார்.

சமூக நீதிக் கொள்கையோடு ஆரம்பிக்கப்பட்ட நீலப் புரட்சி கழகத்தின் முதல் உயர்மட்ட குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.

இந்த முதல் உயர் மட்ட குழுவின் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில்..,

நீலப் புரட்சி கழகம் என்ற இந்த கட்சியானது மீனவர்கள் தலித் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உணர்வுகளை அவர்களுடைய உரிமைகளை பெற்று தருவதற்காக ஆரம்பிக்கப்பட்டது

தற்போது வரை தமிழகத்தில் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தலில் ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் மீனவ சமுதாயத்தினர் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு தனி தொகுதிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை

அடுத்து வர உள்ள தேர்தலுக்குள்ளாக மீனவ சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு என தனி தொகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும்

மீனவ சமுதாய மக்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்