சென்னை அடுத்த மேடவாக்கம் காளீஸ்வரி டவர் அருகில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுக சார்பில் மேடவாக்கம் ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணி(47), என்பவர் மேடை அமைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மேடவாக்கம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மேடை இங்கு போடக்கூடாது என வாக்குவாதம் செய்து, சுப்ரமணியை கன்னத்தில் அடித்து, முதுகில் தாக்கியுள்ளார்.
இதுல் காயமடைந்த சுப்ரமணி குரோம்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மருத்துவமனை தகவல் மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இரு தரப்பிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.