கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதே வேளையில் தேனியைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான சரவணன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சரவணம்பட்டி அடுத்த சின்ன வேடம்பட்டி அருகே கார் ஒன்றை முந்தி சென்ற பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐடி யூனியன் ஆன சரவணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரூம்பா பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் கை கால் முறிவு ஏற்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் மேகநாதன் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




