• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வகுப்புக்கு சரியாக வராத மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்!..

Byமதி

Oct 14, 2021

சட்டப்படி பள்ளிக்கு செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தவோ, அடிக்கவோ கூடாது. இதை மீறி கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவனை அடித்த நிகழ்வு
தமிழகம் முழுவதும் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைக்கிறார்.

இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.