விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, செவல்பட்டி ,கங்கார கோட்டை, வெம்பக்கோட்டை,விஜய கரிசல்குளம், எதிர்கோட்டை, விஜய ரங்கபுரம், சிவசங்குபட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் அடங்கியுள்ளன.

இதில் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை அகற்றுவதற்காக இரண்டு முதல் ஆறு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வெம்பக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பு இல்லாமல் வெயிலிலும், மழையிலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த வாகனங்கள் விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது .ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த தகர செட்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.