மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்ச தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயற்கைக்கால்களை வழங்கினார்.

அப்போது மாற்றுத்திறனாளி மாணவனுக்கு செயற்கை காலை மாவட்ட ஆட்சியர் வழங்கிய பின்னர் அதனை அவரது கையால் மாணவனுக்கு பொருத்தியதை தொடர்ந்து மாணவனின் கையை பிடித்து நடந்துவருமாறி கூறி நடக்கவைத்தார். அப்போது மாணவனின் சிரிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவனிடம் பெயரை கேட்டறிந்து மகிழ்ச்சியாக உள்ளதா என கேட்டார்.
இதனைத் தொடர்ந்து செயற்கை கால்களை வாங்க வந்த மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களிடம் உங்களுக்கு உதவி தொகை வருகிறதா ?என கேள்வி எழுப்பினார். அப்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி மாணவருக்கு செயற்கை கால் வழங்கியதோடு அவரது கையைப் பிடித்து மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை,மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக கல்வி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், சிவக்குமார் (மதுரை),திருமங்கலம் கணேசன் (தொடக்க நிலை) உதவி திட்ட அலுவலர் சரவண முருகன்ஆகியோர் முன்னிலை வகித்தனர் . உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, சிறப்பு பயிற்றுநர்கள், மற்றும் மாற்றுத்திறன் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறன் நல அலுவலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.













; ?>)
; ?>)
; ?>)