• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

த.வெ.க முதல் மாநாட்டிற்கு தொடரும் சிக்கல்

Byவிஷா

Oct 16, 2024

விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தொடர்ந்து மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் மழை காரணமாக சேறும் சகதியும் ஆக முதல் மாநாடு நடைபெறும் இடம் காணப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மாநாடு சமயத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீண்டும் காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதாவது தற்போது மழை பெய்தால் மாநாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்.
வாகனம் நிறுத்தும் இடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை. தொண்டர்கள் வாகனங்கள் இருக்கும் இடங்களை உடனடியாக தேர்வு செய்து அதற்கான வரைபடத்தை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள் எந்த மாதிரியான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து ஒப்படைக்க வேண்டும். போன்ற கேள்விகள் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முன்னதாகவே காவல்துறையில் 33 நிபந்தனைகள் விதித்த நிலையில் அதில் 22 நிபந்தனைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது