• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் போலீஸ் நிலையத்தில் நின்ற தனியார் பள்ளி வாகனத்திற்கு தீவைப்பு…!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனம் மோதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் டெபின் (வயது 16) மரணம் அடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த வாகனம் திடீர் என தீ பிடித்து எரிந்தது. இதில் வாகனம் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசம் ஆனது இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.