சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் படப்பை பிரதான சாலையில் மின் ஒயர் அறுந்து விழுந்தது நீண்ட நேரம் ஆகியும் மின்சாரத்துறை பணியாளர்கள் யாரும் வராததால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் யாரும் மிதித்து உயிர் சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் எச்சரிக்கை விடுத்தவாறு நின்று கொண்டிருந்தனர்.

அது மட்டும் இன்றி மின்சாரத் துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்தும் பணியாளர்கள் வர இரண்டு மணி நேரத்திற்கு மேலானதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைக்கப்பட்டது.
வண்டலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால் உயிர் சேதம் ஏற்படும் முன் அனைத்து மின் ஒயர்களையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..