• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காயம் பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்..,

ByKalamegam Viswanathan

Jan 19, 2024

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கின.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அவ்வழியாக சென்ற அம்மைநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் விஜய் மற்றும் கங்காதரன் உடனடியாக அடிபட்டவர்களை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மனிதாபிமானத்துடன் படு காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த இரண்டு காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவர்கள் இருவருமே காக்கிச் சட்டைக்குள் உளம் ஈரம் உள்ளதை மெய்பித்து விட்டனர்.