• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

வசந்தகுமார் அவர்களுக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க காங்கிரஸ் கோரிக்கை
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள் தமிழக  முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
குமரி மாவட்டத்தில் கடை கோடியான அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் முன்னேறிய சமூக செயற்பாட்டாளரும், அரசியல் வாதியுமான வசந்தகுமார் அவர்களுக்கு, நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியில் முழு உருவசிலையும், பிரதான சாலைக்கு வசந்தகுமார் பெயரும் சூட்ட வேண்டும்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறைசட்டமன்ற உறுப்பினராகவும், 2019ல்  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார். ஏழை எளிய மக்களின் கனவுகளை நனவாக்கியவர், ஏழை பள்ளி மாணவ, மாணவியருக்கு பல உதவிகள் செய்து,அவர்களின் ரோல்மாடலாக திகழ்கிறார். எனவே அவருக்கு  புகழ் சேர்க்கும் விதத்தில் நாகர்கோவில் மாநகர பகுதியில் முழு உருவ சிலை மற்றும் பிரதான சாலைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என தமிழக முதல்வருக்கு காலபெருமாள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.