• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை, விரகனூர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கீழே விழுந்து படுகாயம்..,

ByKalamegam Viswanathan

Dec 31, 2023

மதுரை மாவட்டம் விரகனூர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கீழே விழுந்ததில் படுகாயம், அவரிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பத்திரமாக உறவினரிடம் ஒப்படைத்த 108 ஓட்டுனர்.
மதுரை மாவட்டம் விரகனூர் பாலத்தில் ஒருவர் கீழே விழுந்து இருப்பதாக 108 அவசரகால உறுதிக்கு தகவல் வந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் ஹரி விக்னேஸ்வர் மற்றும் இ எம் டி தேன்மொழி ஆகியோர் அவரை பரிசோதனை போது காயத்துடன் இருப்பதை அறிந்து உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர் பின் யார் என தெரிவதற்காக அவரை சோதித்த பொழுது அப்பொழுது அவரிடம் சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் விலை உயர்ந்த செல்போனும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பொழுது அவருடைய முகவரி கிடைக்கப்பெற்றது அவர் மதுரை மாவட்டம் காமராஜர் சாலையை சேர்ந்த முருகானந்தம் வயது 58 என்பதும் இவர் காமராஜர் சாலையில் இருந்து பாண்டி கோவிலுக்கு அதிகாலையில் சென்று சென்று கொண்டு இருந்த பொழுது விரகனூர் பாலம் அருகே பாலத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தெரியவந்தது இது குறித்து அவர் மகன் தினேஷிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தார் அரசு மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னணியில் இவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட விலை உயர்ந்து செல்போன் ஆகியவை ஹரி
விக்னேஸ்வர் மற்றும் இ எம் டி தேன்மொழி பத்திரமாக இவர்கள் ஒப்படைத்தனர் அவர்கள் குடும்பத்தினரும் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினர் ஆகியோர் பாராட்டுகள் தெரிவித்தனர் மேலும் தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்றதால் அவர் உயிரும் காப்பாற்றி மற்றும் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பத்திரமாக ஒப்படைத்த ப்பட்டது விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.