• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறுவயதில் பாடத்தெரியாத ஒருவர் இன்று பாடல், இசை இரண்டிலும் கலக்குகிறார்..!

Byவிஷா

Jul 22, 2022

சிறு வயதில் பாடவே தெரியாத ஒருவர் தனது விடாமுயற்சியால் பாடலிலும், இசையிலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வருகிறார்.
அவர் யார்..? அனைவரின் மனதையும் கொள்ளையடிக்கும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தான் அவர்.
இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனுஷின் 3 படத்தில் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலகளவில் பிரபலமானார். அவர் இசையமைத்த கொலவெறி பாடல் படைத்த சாதனைகள் பற்றி அனைத்து ரசிகர்களும் அறிவார்கள்.
அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மாரி என அவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் வைரல் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்து அடுத்தகட்டத்துக்கு சென்றார் அனிருத்.
தற்போது அஜித் மற்றும் விஜய்யை தொடர்ந்து ரஜினி, கமல் என இவர் இசையமைக்காத முன்னணி நடிகர்களே கிடையாது என்றாகிவிட்டது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
அவர் இசையமைக்கும் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் வகையை சேர்ந்தது தான். இந்நிலையில் அனிருத்தின் தந்தையும், நடிகருமான ரவிச்சந்தர் அனிருத்தை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது..,
அனிருத்துக்கு சிறு வயதில் பாடவே தெரியாது. ஆனால் இன்று பல பாடல்களை அனிருத் மிக சிறப்பாக பாடி வருகின்றார். மேலும் அவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை பார்க்கும்போது ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு ரசிகனாகவும் அனிருத்தை பார்த்து பெருமையாக உள்ளது என கூறியுள்ளார் ரவிச்சந்தர். தற்போது அனிருத் ஒரே சமயத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.