மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி 18 விதிமுறைகளின் படி உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் கார்மேகம் (வயது 65 )என்பவர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து யூடியுப் சானலில் அவதூறாக பேசியதாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.




