• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்க்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

Byp Kumar

Apr 10, 2023

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் காலை மாலை இரண்டு வேலைகளிலும் அம்மனும் சுவாமியும் நான்கு மாசி வீதிகளிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 30 பட்டாபிஷேகம், மே 01 திக்குவிஜயம், மே 02,திருக்கல்யாணம், மே 03 தோரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.


அதனடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே – 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது எனவும்,இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 4ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சித்திரை திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. பந்தல் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்வு கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, காளைகள் முன் செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது.