• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானை

BySeenu

May 10, 2025

தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை, 5 முறை முயற்சி செய்தும் யானை கூட்டம் குட்டியை ஏற்க மறுக்கின்றனர். முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர்.

கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் நிலைய சுற்று பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது ஆண் யானை குட்டி ஒன்று தாயை பிரிந்த நிலையில் இருந்து உள்ளது. இதனைக் கண்ட வனத்துறையினர் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்ப்பதற்காக கோவை வனக்கோட்டம் வன கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு, தேவையான உணவு வழங்கப்பட்டது. பின்னர் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த தாயானையுடன் மற்ற யானை கூட்டங்களுடன் சுமார் ஐந்து முறைக்கு மேல் சேர்த்து விடப்பட்ட நிலையில், யானை குட்டியை காட்டு யானைகள் ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து வந்தது. இந்நிலையில் சுமார் ஒரு மாதமே ஆனா யானை குட்டியை கடுமையான அதன் வயது மற்றும் வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வன அலுவலர்களின் உத்தரவுப்படி ஆனைமலை புலிகள் காப்பகம் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.