கோவை அவிநாசி சாலை பன் மால் பின்புறம் “கஃபே டி” என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள், கலைஞர்கள் வரை அனைவரையும் கஃபேக்கள் கவர்ந்திழுக்கின்றன. அதிலும் தொழில் மற்றும் கல்வி நகரமாக கோவையில் பல்வேறு விதமான புதிய கஃபேக்கள் திறக்கப்பட்டது வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பிரபலமான கஃபே என்ற தேநீர் விடுதி கோவை பீளமேடு பன்மால் பின்புறம் இன்று திறக்கப்பட்டது.

இதுகுறித்து கஃபே நிறுவனர் சுந்தர மூர்த்தி கூறுகையில்,
எங்கள் முதல் கிளை சென்னையில் துவக்கப்பட்டது. தற்போது கோவையில் இரண்டாவது கிளையை திறந்துள்ளோம். தனி செப் மூலம் ஸ்பெஷலாக புதிய மெனுக்களை தயாரித்துள்ளோம். இதுதான் எங்கள் கடையின் சிறப்பு. ஸ்பெஷல் பில்டர் காப்பி தான் எங்கள் சிறப்பு. அதைமட்டுமின்றி எல்லா விதமான மக்களும் வந்து செல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப குறைந்தது 20 ரூபாய் இருந்து 300 ரூபாய் வரை பீட்சா, பர்கர் வகைகள் போன்ற உணவுகள் இங்கு கிடைக்கும்.

கோவையிலேயே ஆர்.எஸ். புரம், சாய்பாபாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)