• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மாணவர்களை முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி

BySeenu

Jan 11, 2025

ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யங் ப்ரேனர் (Young Preneur) 2025 நிகழ்ச்சியில் இளம் மாணவ தொழில் முனைவோர்கள் அசத்தல்.

கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பில் (Young Preneur) யங் ப்ரேனர் 2025 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2025 ஆண்டில், இளம் தலைமுறை மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் பண்பாட்டினை மதிக்கவும், தொழில்துறை ஆவலை வளர்க்கவும் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும் ஆர்.கே.எஸ்.கல்வி நிலையத்தின் நிறுவனமான மறைந்த டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் பேத்தியான நளினி சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.கே.எஸ்.கல்வி நிலையத்தின் கல்வி இயக்குனர் வகிஷா விக்ரம்,பள்ளியின் முதல்வர் அஜித் குமார்,தலைமையாசிரியர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யங் பிரனேர் நிகழ்ச்சி குறித்து நளினி சண்முகம் கூறுகையில்,
சவால்கள் நிறைந்த இன்றைய காலத்தில் மாணவ பருவத்திலேயே மாணவர்கள் கல்வி பயில்வதோடு கூடுதல் திறன்களை வளர்த்தி கொள்வது அவசியமாக இருப்பதாக தெரிவித்த அவர்,அதன் அடிப்படையில் மாணவர்கள் வாழ்க்கை திறன் களை அபிவிருத்தி செய்யும் ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு நேரடியாக தொழில் துறை அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது பொருட்களை காட்சி படுத்தி விற்பனை செய்தனர்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள்,பேன்சி பொருட்கள்,உணவு அரங்குகள்,என பல்வேறு அரங்குகளை அமைத்த மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலரும் பொருட்களை ஆவலுடன் வாங்கி சென்றனர்.

ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்றும் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.