• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

ByA.Tamilselvan

Oct 12, 2022

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.
கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 1980-ம் ஆண்டிலிருந்து இந்திய விமானப்படையில் இடம் பெற்றுவரும் மிக்-29 ரக போர் விமானம், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, எந்தத் திசையிலும் தாக்குதல் நடத்தக்கூடிய திறன், வான், நிலம் மற்றும் கடற்பகுதியிலுள்ள இலக்கையும் தகர்க்கக்கூடிய தொழில்நுட்பம், நவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வசதி உள்ளிட்டவற்றோடு வடிவமைக்கப்பட்டது. மேலும், இதில் விமானியின் இருக்கைக்கு மேலுள்ள காக்பிட் எனப்படும் கண்ணாடிக் கதவு, டிஜிட்டல் தொடுதிரையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. எதிரிநாட்டு விமானம் இந்திய வான் எல்லைக்குள் புகுந்த ஐந்து நிமிடங்களில் அதைக் கண்டறிந்து அழிக்கும் சக்திபடைத்தது மிக்-29 ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.