இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்ட மாநாடு இன்று மாவட்ட துணைச் செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் செய்தியாளர்களை சந்திக்கும் போது “காரைக்கால் மாவட்டம் தொடர்ந்து புதுச்சேரி அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளே இங்கு பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது கண்டனத்திற்குரியது.

கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் அதாவது 100 நாள் வேலை திட்டம் மூலம் 100 நாளும் வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பக்கத்து மாநிலத்தில் திமுக தலைமையிலான ஆட்சியில் 100 நாள் வேலை 100 நாளும் வழங்கப்படுவதாக தெரிவித்தார். 100 நாளும் வேலை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கான வேலைத் திட்டத்தையும் நிதியையும் புதுச்சேரி அரசு ஒதுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தெரிவித்த அவர் எந்த காலத்திலும் இது போன்ற ஆட்சி இல்லை எனவும் தெரிவித்தார். காரைக்காலில் அரசு நிர்வாகம் ஊழலின் உறைவிடமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். மக்களின் எந்த பிரச்சனையையும் கவனிப்பதற்கு என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மனை பட்டா வேண்டி செப்டம்பர் மாதம் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.