ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு : ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). இவர் கோவை காளப்பட்டி பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், வேல்முருகனை ஆன்லைன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து உள்ளனர்.


இதை அடுத்து அவர் காளப்பட்டி பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வேல்முருகனை தனியாக அழைத்துச் சென்று, அவரை மிரட்டி ரூ.9,500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, வாலிபரை மிரட்டி பணம் பறித்த சரவணம்பட்டியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (20) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.




