• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி உணவகத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளி – மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்…

ByP.Thangapandi

Dec 22, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாசிநகரைச் சேர்ந்தவர் சின்னன். இவர் ஆண்டிபட்டி கணவாய் அடிவாரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவக வளாகத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் கூலி தொழிலாளியாக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இன்று வழக்கம் போல தோட்டத்து பகுதியில் மோட்டார் இயந்திரம் மூலம் புட்களை வெட்டும் பணி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்., படுகாயமடைந்த சின்னனை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிணவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.