• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

ByKalamegam Viswanathan

Jan 27, 2025

கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழமாத்தூர் ஊராட்சி செயலாளருக்கு பதிலாக அவரது மனைவியை கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை நடத்துவதாகவும், கிராமசபை கூட்டத்தை ஊராட்சி செயலாளரின் மனைவி அறிக்கை வாசிப்பதாகவும் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில், இது குறித்து கேள்வி கேட்டால் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும், கிராம சபை கூட்டம் நடைபெறும் பகுதிகளில் சமூக விரோதிகளை அனுப்பி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குவதாகவும், ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்..,

மதுரை அருகே கீழமாத்தூர் ஊராட்சியில் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கம்போல் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் என்பவர் கிராமசபை கூட்டத்தின் கூட்டப் பொருளை வாசிக்காமல் வேறு ஒரு நபரைக் கொண்டு வாசிக்க வைத்தார். வாசிக்கும் பொழுது 2024 -25 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளுக்கான இக்கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதாக வாசித்தனர். இதை வழிமறித்து 2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுகளை வாசித்துவிட்டு, அடுத்த கூட்டப் பொருளை வாசிக்குமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கேள்வி கேட்டவர் உள்ள கூட்டத்திற்கு வருகை தந்த பற்றாளர் உடனே வரவு செலவு நோட்டை எடுத்து வருமாறு கூறினார். இதற்கு கொஞ்சமும் அசராமல் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் உட்கார்ந்த இடத்திலேயே விட்டு அசராமல் உட்கார்ந்து இருந்தார். அடுத்து இரண்டாவதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று வாசித்தனர். அதற்கு சுத்தம் செய்த ஆதாரங்களை பொதுமக்கள் கேட்டனர். தொடர்ந்து ஆதாரங்களையும், வரவு செலவுகளையும் கேட்டதால் எரிச்சல் அடைந்த ஊராட்சி மன்ற செயலாளர் கார்த்திகேயன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும், இடையிலேயே கூட்டத்தை நிறுத்திவிட்டு, நோட்டுகளை தூக்கிவிட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று விட்டனர். இது சம்பந்தமாக காவல்துறை அதிகாரி இடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் இவ்வாறு கூறினார். மேலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் சமயத்தில் சமூக விரோதிகளை கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குவதாகவும், கேள்வி கேட்பவர்களை அடியாக்கள் கொண்டு மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் இனிவரும் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கிராமசபை கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.