• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆலந்தூர் நீதிமன்றம் முன்பு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கும் குற்றவாளியின் உறவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

Byஜெ.துரை

Feb 26, 2024

மது போதையில் சென்று மளிகை கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது அதிமுக பிரமுகரிகளின் குற்றவாளியின் உறவினர்கள் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை ஆதரவாளர்களால் கேமராவை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

அது மட்டும் இன்றி தகாத வார்த்தைகளில் பேசி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆலந்தூர் நீதிமன்ற முன்பு பரபரப்பான சூழல் நீடித்து வருகிறது.

அங்கு வந்த காவல்துறையினரும் கைதானவர்களுக்கு ஆதரவாக பேசியதால் கடும் வாக்குவாதம் நாங்கள் பார்க்காத வழக்கா என குற்றவாளிகளுக்கு ஆதரவாக உறவினர்கள் கடும் வாக்குவாதம்.

தொடர்ந்து இதுபோன்று செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டலும் தாக்குதலும் நடைபெறுவது அதிகரித்து வருவதால் முறையான பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.