• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சி…

ByG. Anbalagan

May 1, 2025

பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சியை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கீழ் இயங்கும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு விழாவையொட்டி ஈக்வஸ்டிரின் என்றழைக்கபடும் குதிரை சாகச நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குதிரைகள் மீது அமர்ந்தும், சவாரியாக சென்றும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டி அசத்தினர். குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட சிறிய மாணவ, மாணவியர்கள் குதிரையின் மீது அமர்ந்தவாறும், நின்றவாறும் பல்வேறு பயிற்சிகளை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

குதிரையின் மேல் அமர்ந்தவாறு புத்தகத்தை படிப்பது ஜிம்னாஸ்டிக் செய்தது. அதே போல 15 வயதுக்கு மேலான மாணவர்கள் குதிரை சவாரியாக சென்று மைதானத்தில் வைக்கபட்டிருந்த உயரமான தடைகளை தாண்டி வருவது, தரையில் உள்ள பொருட்களை ஈட்டி மற்றும் வால் ஆகியவற்றின் மூலம் குத்தி எடுப்பது, குதிரை சவாரி செய்து கொண்டே மாணவர்ளின் தலை மீது இருந்த வெள்ளிரிகாயை வெட்டுவது போன்ற சாகசங்களையும் செய்து காண்பித்தனர்.

அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு இணையாக சாகசங்களை செய்து அசத்தினர். இத்தகைய குதிரை பயிற்சி செய்வதன் மூலம் தேசிய மற்றும் உலகளவில் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு ராணுவ பணிகளில் சேரவும் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.