மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர்.
கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில்

நான்கு மாதங்களுக்கு முன்பாக சாக்கடை கழிவுநீர் கால்வாய்அமைக்க முடிவு செய்த அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்டி சென்றனர் ஆனால் முறையாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்,
குழந்தைகளுக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில்,
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகதிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மாறாக அப்படித்தான் இருக்கும் என்றும் புதிய ஊராட்சி மன்ற தலைவர் வந்தவுடன் உங்களுக்கு கால்வாய் அமைத்து தருவோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்த சிறுமி அசதியில் கழிவுநீர் கால்வாயை தாண்டும் போது தவறி கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமி விழுந்த நேரத்தில் அருகிலேயே ஆட்கள் இருந்ததால் சுகாரித்துக்கொண்ட அருகில் இருந்த பெண் உடனடியாக கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் பிழைக்க வைத்துள்ளார்

சிறுமி விழுந்த நேரத்தில் அருகில் ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால் சிறுமி உயிர் இழந்திருக்கும் என அந்த பகுதியை பொதுமக்கள் கூறுகின்றனர் ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சரி செய்ய ஊராட்சி மன்றம் மற்றும் அலங்காநல்லூர் யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்
கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டு சென்ற கழிவுநீர் கால்வாயில் சிறுமி விழுந்த நிலையில் அருகில் இருந்த பெண் சிறுமியை மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இனிமேலாவது கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டுச் சென்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை கட்டி முடித்து கழிவுநீரை முறையாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் அலங்காநல்லூர் ஒன்றிய நிர்வாகம் அய்யங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்




