• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு – அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயி-யால் பரபரப்பு

ByP.Thangapandi

Feb 22, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன்., விவசாயியான இவர் தனது தோட்டத்து பகுதியில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த இரண்டரை அடி நீளமுள்ள அடையாளம் தெரியாத விஷப்பாம்பு இந்த விவசாயியை கடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்தவாறு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இந்த விவசாயி, ஜெயராமனை கண்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றன.

முதலுதவி சிகிச்சை பெற்ற பின் எந்த பதற்றமும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து விவசாயி உணவருந்திக் கொண்டிருந்ததை பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்த்துறை உதவியுடன் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த வனத்துறையினரிடம் பாம்பை விவசாயி ஒப்படைத்தார்.

வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் போது பாம்பு விவசாயிகளின் நண்பன், அதை கொலை செய்ய கூடாது, பாம்பு கடித்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும் என தெரிந்தே அதை பிடித்து வந்தாகவும், பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டு விடும்படி விவசாயி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.