திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரியான் புதூர் பகுதியில் முகம் செதுக்கப்பட்டு கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ஒன்றே கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி விஜியகுமார் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தடையவியல் நிபுணர்கள் நபருடைய ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் வினோத் கண்ணன் என்பதும் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்த இவரின் மேல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தற்பொழுது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இது தொடர்பாக விசாரித்து சென்றுள்ளார். மேலும் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வந்து வினோத் கண்ணனை சாரமாதியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் மூன்று தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்லடம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.