• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!

Byவிஷா

Jan 6, 2024

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று, 4000 டாலர் பணத்தை (ரூ.3.32லட்சம்) தின்றுள்ளதால், உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.
பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில சமயங்களில் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் எதாவது செய்துவிடும். அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஒரு நாய் 4,000 டாலர் (ரூ. 3.32 லட்சம்) பணத்தை சாப்பிட்டு அதன் உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிளேட்டன் மற்றும் கேரி லா இருவரும் செசில் என்ற 7 வயது நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் ரூ. 3.32 லட்சத்தை மென்று சாப்பிட்டுள்ளது.
நாய் பணத்தை சாப்பிட்டதை தெரியாமல் கிளேட்டன் மற்றும் கேரி லா உடனடியாக பதற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் பணத்தை தேடி கொண்டிருந்தனனர். பின் அடுத்த சில நிமிடங்களில் நாய் தான் விழுங்கிய பணங்களை வாந்தி எடுக்க தொடங்கியது.
இதனை பார்த்த கிளேட்டன் மற்றும் கேரி லாவுக்கு நாய் பணத்தை சாப்பிட்டது தெரிய வந்தது. உடனடியாக நாய்க்கு மருத்துவ சிகிச்சை செய்து பணத்தை எடுக்கலாமா என்று கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள். ஆனால், மருத்துவர் அப்படி எல்லாம் செய்ய கூடாது என்று கூறிவிட்டாராம். நாயும் தான் விழுங்கிய அந்த பணத்தை மெல்ல மெல்ல வாந்தி எடுத்து பணத்தை சேர்த்து அதனை பெரும்பாலான நோட்டுகளை சுத்தம் செய்து வங்கியில் மாற்றினார்கள். இன்னும் 38,000 ரூபாய் பணம் வெளிய வரவில்லை எனவும், இப்படி எங்களுடய நாய் செய்வது இதுவே முதல்முறை எனவும் அதன் உரிமையாளர் கிளேட்டன் வேதனையுடன் பேசியுள்ளார்.