• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறைதீர்க்கும் நாள்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2025

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் நேரடியாக சென்று, கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் (ம) மாற்றுத் திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.