• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க. அணிகள் இணையும்- சசிகலா

ByA.Tamilselvan

Oct 2, 2022

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக அணிகள் இணையும் என சசிகலா ஆரூடம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா பேசும் போது.. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த எல்லோரும் ஒன்று என்றே நான் நினைக்கின்றேன். அதனால்தான் நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. என்னைப் பொறுத்த வரை எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் எல்லோரும் ஒன்றிணையும் சூழ்நிலை வரும். அது மிக விரைவில் நடக்கும். தொண்டர்களை பொறுத்தவரை கட்சி ஒன்றாக வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும், எண்ணத்துடனும் தான் இருக்கிறார்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதனைத்தான் தொண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.